Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
தங்களுடைய முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு பொய்யான பிரசாரங்களையும் குழப்புகின்ற வேலையை மட்டும் தான் விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் மேற்கொள்கின்றனரெனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், பொது வெளியில் வந்து பேசுவதற்கு, இவர்களுக்குப் பயம் என்றும் முடிந்தால் வந்து பேசலாம் என்றும் சவால் விடுத்தார்.
கிளிநொச்சி – தர்மபுரத்தில், நேற்று (19) நடைபெற்ற கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஒரு பொதுமேடையில் வந்து பேசுவதற்கு தலைவர்களுக்கு வக்கில்லையெனவும் விக்னேஸ்வரனுக்கு வந்து நின்று பேசுவதற்குக் கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்ல அவருக்குத் தெரியாதெனவும் கூறினார்.
ஏனென்றால், எந்தக் கேள்வி கேட்கப்படும் என்று முதலே தெரிந்தால் தானே வாசிப்பதற்கு எழுதிக் கொண்டு வரலாமெனத் தெரிவித்த அவர், அதைவிடுத்து அதில் வைத்து கேள்விக் கேட்டால், அவர் எப்படி பதில் சொல்லுவாரெனவும் வினவினார்.
“குறிப்பாக, கேள்வி பதில் என்று பத்திரிகையில் வருவதில் கேள்வியும் அவரே பதிலும் அவர் தான். மற்றவருக்குத் தான் வரப் பயம். இவருக்கு என்ன பயம்? முடிந்தால் வந்து பொது வெளியில் பேசலாம். இதனைவிடுத்து, எங்களுடைய முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு, பொய்யான பிரசாரங்களையும் குழப்புகிற வேலையை மட்டும் செய்து கொண்டு, அவர்கள் ஒரு பக்கத்தில் பயணிக்கிறார்கள்” எனவும் சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
மறுபக்கத்தில், அவர்களும் தங்களைத் தீவிர தமிழ்த் தேசியவாதிகளைப் போல காண்பித்துக் கொண்டிருக்கிறார்களெனத் தெரிவித்த அவர், ஆனால், செய்வதெல்லாம் குழப்ப வேலைகள் தான் எனவும் சாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago