Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 15 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
யாழ்ப்பாணத்தில், பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை விற்பனைச் செய்யாமல் பதுக்கியும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் எச்சரிகை விடுத்தார்.
அத்துடன், விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், வெள்ளிக்கிழமை (13) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இது தொடர்பில், மாவட்டப் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகர்கள் மற்றும் அளவீட்டு நியமங்களின் அலுவலகர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி, யாழில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனவெனவும் கூறினார்..
மேலும் பாரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்குமெனத் தெரிவித்த அவர், சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனவும் கூறினார்.
அத்துடன், திடீர் சுற்றிவளைப்புகளும் காண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதெனவும், அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்த்தில் பொது மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு அத்தியாவசிய பொருள்கள் எதற்கும் தட்டுப்பாடு இல்லையென்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தாலும், பொது மக்களால் கடந்த கால அனுபவத்தினால் தேவைக்கதிகமாக பொருள்களை கொள்வனவு செய்ததாலேயே தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தப் பொருள் தட்டுப்பட்டை நிவர்த்தி செய்ய முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
மேலும், மாவட்டச் செயலகத்தின் களஞ்சியத்தில் எந்தப் பொருள்களும் வைப்பில் இல்லையெனத் தெரிவித்த அவர், இதனால் கூட்டுறவுத் திணைக்களத்தை நாட வேண்டிய நிலையிலேயே தாங்கள் உள்ளதாகவும் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago