2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட உணவகங்களில், லஞ்சீட்,  பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி, யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணணிடம் அறம் அமைப்பினர் மகஜரொன்றை, இன்றைய தினம் கையளித்திருந்தார். 

யாழ். மாவட்டத்தை சேர்ந்த சமயத் தலைவர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினர், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட 500 பேரைக் கொண்ட மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து கோப்பு மற்றும் குறித்த விடயம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை என்பன மேயர் மணிவண்ணணிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின் போது இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதிலிருக்கும் சவால்கள் மற்றும் லஞ்சீட்டுக்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தல் போன்ற பல மாற்றுத்திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன.

வெகுவிரைவில் மாற்றுத்தீர்வுகளுடன் லஞ்சீட்டுக்கு பதிலாக வாழையிலை உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திகள் உணவகங்களில் உணவு விநியோகம் செய்யவும் பொதி செய்யும் பயன்படுத்தப்படுமென,  அறம் அமைப்பினருக்கு மேயர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X