2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொலிஸாரை கண்டதால் மணலை விட்டு ஓட்டம்

Janu   / 2023 நவம்பர் 06 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிப்பரில் மணலை கடத்தி செல்லும் போது பொலிஸாரை கண்டதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியிலேயே இச்சம்பவம் திங்கள்கிழமை 06) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பரில் மணல் கடத்தப்பட்ட போது பொலிஸார் வாகனத்தை மறித்துள்ளனர். இதனையடுத்து டிப்பரில் மணலை கடத்தியவர்கள் தப்பித்தோடியதுடன் வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன்  போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாரால்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.

 பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X