எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸார் ஒருவரை மோதி காயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற முச்சக்கரவண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வீதி சோதனை நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (30) மாலை ஈடுபட்டிருந்தனர். அதன்போது வீதியால் வந்த முச்சக்கர வண்டியினை பொலிஸார் மறித்துள்ளனர். சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்தாது மறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதன் போது அங்கு கடமையில் இருந்த ஏனைய பொலிஸார் முச்சக்கர வண்டியை துரத்தி பிடித்து சாரதியை கைது செய்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025