Freelancer / 2022 ஒக்டோபர் 14 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மூதாட்டியின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த மூதாட்டியின் கணவர், பிள்ளைகள் வெளியில் சென்ற சமயம் மூதாட்டி மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார்.
அந்நேரம் தம்மை பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த மூவரடங்கிய குழு ஒன்று மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து , அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூவரடங்கிய கொள்ளை கும்பல் தொடர்பில் சிசிரிவி பதிவுகள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (R)
18 minute ago
22 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
2 hours ago
3 hours ago