2025 ஜூலை 23, புதன்கிழமை

பொலிஸார் மீதான வாள்வெட்டு: சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரை, மூன்று நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்துள்ளார்.

கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலய பகுதியில், பொலிஸார் மீது கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பொலிஸார் இருவர் படுகாயமடைந்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்த நிலையில், யாழ். நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஐவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஐந்து சந்தேகநபர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸார் அனுமதி கோரினார்கள். அதற்கு நீதவான் அனுமதி அளித்தார்.

இதேவேளை, கொழும்பில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ்.நிஷாந்தன், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரின் தடுப்புக் காவலில் வைத்தே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீது பயங்கரவாதச் தடுப்பு சட்டத்தின் கீழ், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .