Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 15 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பொலிஸாரை தாக்கி விட்டு மற்றும் விபத்தினை ஏற்படுத்திய இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப் பகுதியில் ஒரு உந்துருளியில் வீதியில் இருவர் சாகசம் காட்ட முற்பட்ட வேளை, வீதியால் பயணித்த ஒருவருக்கு விபத்தினை ஏற்படுத்திவிட்டு அவர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்கள்.
இச் சம்பவத்தினை கடமையில் இருந்த பொலிஸார் சென்று பார்த்த போது பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரை காயப்படுத்திவிட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தினை ஏற்படுத்தியவர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான சட்ட நடவடிக்கையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago