2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொலிஸார் மீது வாள் வெட்டு: சந்தேகநபர்கள் இன்று மன்றில் ஆஜர்

Editorial   / 2020 மே 25 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ், எம்.றொசாந்த்

யாழில், ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய சென்ற பொலிஸார் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில், நேற்று (24) மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த காங்கேசன்துறை பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்கள், இன்று (25) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினர்.

வலிகாமம் வடக்கு - நகுலேஸ்வரம் பகுதியில், நேற்று முன்தினம் (23), நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமலில் இருந்த வேளையில், இரவு 10 மணியளவில், இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய முயன்றபோது, பொலிஸ் உப பரிசோதகர் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரை வாளால் வெட்டி காயப்படுத்தியப் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் அறிந்து அவ்விடத்துக்கு விரைந்த மேலதிக பொலிஸார், வாள் வெட்டை மேற்கொண்ட மூவரை அடையாளம் கண்டு, அவர்களை நேற்று (24) காலை கைதுசெய்ததுடன், அவர்களிடம் இருந்து கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குழு மோதலில் ஈடுபட்ட ஏனையவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X