Editorial / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது , அங்கிருந்து தப்பி சென்ற இளைஞன், நேற்றைய தினம் (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஹெரோயின் போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் நிலைய சிறைக்கூட கதவின் பூட்டினை சரியாக பூட்டததால் , அதனை திறந்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார்.
குறித்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பொலிஸார் தேடி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025