Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதேசத்தில், கொள்ளையடிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் புகுந்துள்ளனர்.
வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்டு உரிமையாளர் கூக்குரல் எழுப்பியதையடுத்து, வீட்டு வளவினுள் புகுந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடி வீட்டின் வெளியே தாம் கொண்டு வந்து நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோட முனைந்துள்ளனர். இதன்போது அங்கு ஒன்று திரண்ட அயலவர்கள் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர்.
அதன்பின்னர், தெல்லிப்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைதுசெய்தனர்.
குறித்த இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலிஸ் உத்தியோகஸ்தருடையது எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025