Janu / 2025 மே 21 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) அன்று இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் உடல் சுகவீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்ததாகவும் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
மேலும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எஸ். தில்லைநாதன்
5 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
28 minute ago