2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போராட்டத்தை கைவிட்ட அரசியல் கைதிகள்

Freelancer   / 2022 பெப்ரவரி 26 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

குறித்த அரசியல் கைதிகளை இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று பிற்பகல் ஆளுநர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இன்று காலை ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் ஒருவருடன் அரசியல் கைதிகளின் உறவினர்களும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைவாக இன்று காலை சிலைச்சாலைக்கு சென்ற அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X