2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

போலி கனேடிய டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்ஷன்

போலியான, 10 ஆயிரத்து 100 கனேடிய டொலர் நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

 யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், இருவர், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, “யாழ். நகரில் உள்ள நாணயமாற்று நிலையத்துக்கு, இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 கனேடிய டொலர், நாணயத்தாள்களை மாற்றுவதற்குக் கொண்டு சென்றுள்ளார்.  

கனேடிய டொலர்கள் அனைத்தும் போலி நாணயங்கள் என, நாணயமாற்று சேவைப் பிரிவில் உள்ள இளைஞரால் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.  

 ஸ்தலத்துக்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர், நாணயத்தாள்களை மாற்றுவதற்கு வந்த இளைஞரைக் கைதுசெய்ததுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரே, இந்த நாணயத் தாள்களை மாற்றிக்கொண்டு வருமாறு தன்னிடம் தந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.  

அதனைத் தொடர்ந்து, சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயத்தாள்​களை மாற்றுவதற்கு வந்த நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையின் போது, போலி கனேடிய டொலர்களை, சந்தேகநபர்களான இவ்விருவருமே அச்சிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.  

 அவ்விருவரிமும் விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் பின்னர், அவர்களை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.  

10 ஆயிரத்து 100 கனேடிய டொலரென்பது இலங்கை ரூபாயில் சுமார் 1.25 மில்லியன் ரூபாயாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .