2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

போக்குவரத்து சபை பஸ் மீது கல்வீச்சு

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் மீது ஞாயிற்றுக்கிழமை  எழுதுமட்டுவாள் பகுதியில்  கல்  வீச்சு  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ், பிற்பகல் 4 மணியளவில் திருகோணமலையிலிருந்து புறப்பட்டு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியிலேயே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலினால், பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதாகவும் பயணிகள் மற்றுமொரு பஸ்ஸில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த கல்வீச்சு தொடர்பாக விசாரணைகளை   பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X