Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அ.அரசரட்ணம்
குடாநாட்டில் புகையிலைக்கு விலையுயர்வும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளமையை அடுத்து, புகையிலை உற்பத்தி இந்த வருடத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் புகையிலை உற்பத்திக்குப் பதிலாக உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், மரவள்ளி போன்றவற்றை உற்பத்தி செய்த விவசாயிகள், இம்முறை புகையிலை உற்பத்தியில் அதிக நாட்டம் செலுத்தியுள்ளனர்.
அரசாங்கம் புகைத்தல் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வருடம் குடாநாட்டில் புகையிலைக்குப் பதிலாக மாற்றுப் பயிர்களைச் செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.
புகையிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமையால் புகையிலைக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டது. இதனால் சுருட்டுத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு தொகுதி புகையிலையின் பெறுமதி இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
10 minute ago
14 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
5 hours ago
6 hours ago