2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொங்கலுக்கு முதல் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (11) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறினார். 

பொதுமக்களுக்குச் சொந்தமான 5,048 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் வசம் இன்னமும் உள்ளதாகவும் இதனை விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X