Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் கொலை வழக்கில், குற்றப் புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணை முடிவடைந்து, விசாரணை அறிக்கை அனைத்தும், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகை தந்திருந்த சட்டத்தரணி தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை, கடந்த ஒரு வருடமாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, காலநீடிப்புக்காக மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3 மாதகாலங்கள் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிணைச்சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்துவதற்கும், அதற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து, அனுமதியளிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் திணைக்களத்தால், மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அனுமதி வழங்குவது தொடர்பில் மேற்படி வழக்கு, புதன்கிழமை (10), யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
“பொலிஸாரின் விசாரணை முடிவடைந்து, விசாரணை அறிக்கை, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் செய்கின்றது. இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால், சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் அபாயமும், வழக்கை குழப்பும் சம்பவங்களும் இடம்பெறலாம். ஆகையால், சந்தேகநபர்களை மேலும் 3 மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கவேண்டும்” என, சட்டமா அதிபர் திணைக்களச் சட்டத்தரணி கோரினார்.
4 ஆவது சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன், 7ஆவது சந்தேகநபரான பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் 9 ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சரத் வெல்கம, இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
“4, 7, 9ஆம் சந்தேகநபர்கள், சம்பவ தினத்தன்று, கொழும்பில் இருந்தமைக்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.சி.டி.வி கமெரா பதிவுகள் மூலம் குற்றப்புலனாய்வு பொலிஸார், உறுதிப்படுத்தியுள்ளதை, நான் அறிந்தேன். இந்நிலையில், இவர்கள் மூவரும் கடந்த 15 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4ஆவது சந்தேகநபர், வைத்திய சிகிச்சை பெற்றுள்ளார். 4ஆம், 9 ஆம் சந்தேகநபர்களின் தாயார், சிறையில் இருந்து இறந்துள்ளார். மூன்று சந்தேகநபர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. 7ஆவது சந்தேகநபர் இளைஞன். திருமணம் செய்யாதவர். மற்றவர்கள் திருமணமாகி, அவர்களுக்குக் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய குடும்பங்கள், தொழில்வாய்ப்புக்களின்றி உள்ளன. குடும்பம் சீரழிகின்றது” என்றார்.
நீதிபதி இளஞ்செழியன் பதிலளிக்கையில்,
“விசாரணைக் கோவையின் பிரகாரம், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. பிணை வழங்கினால், சாட்சியங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும், சாட்சியங்கள் சுதந்திரமாகச் செயற்படமுடியாது. ஆகையால், சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரையில், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குகிறேன்” என்று கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago