2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மாணவியின் கொலை: மேலும் இருவர் கைது

Gavitha   / 2016 மார்ச் 01 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் திங்கட்கிழமை (29) கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன்,  தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X