2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புங்குடுதீவு மாணவியின் தாயை அச்சுறுத்திய பெண்ணின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயாரை அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் விளக்கமறியல், எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, ஊர்காவற்துறை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில், இன்று திங்கட்கிழமை (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணும், மன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

இதன்போது, அப்பெண் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு, நீதவானிடம் கோரினார்.

இதற்கு பதிலளித்த நீதவான், 'கடந்த வழக்குத் தவணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட எழுதுமூல பிணை விண்ணப்பம் தொடர்பில், அடுத்த வழக்கு தவணையின் போது கட்டளை பிறப்பிக்கப்படும்' எனத் தெரிவித்ததுடன், இவ்வழக்கினை, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X