Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பெண்கள் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 25.40 மில்லியன் ரூபாய் தேவையென யாழ். மாவட்டச் செயலகத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது.
பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் 150 செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு 7.5 மில்லியன் ரூபாயும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் 150 செயற்றிட்டங்கள் மேற்கொள்ள 7.5 மில்லியன் ரூபாயும் யாழ். மாவட்டத்திலுள்ள 3 பெண்கள் சம்மேளனத்தை வலுப்படுத்த 1.5 மில்லியன் ரூபாயும் தேவையென கூறுப்படுகின்றது,
அத்துடன், பால்நிலை வன்முறையால் பாதிப்புற்ற பெண்களை இணைத்து வலுப்படுத்த 0.9 மில்லியன் ரூபாயும் ஆளுமை விருத்தி பயிற்சி, தலைமைத்துவம், தீர்மானம் எடுத்தல், நிதி முகாமைத்துவம் ஆகியவை தொடர்பில் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்றிட்டங்கள் மேற்கொள்ள 6 மில்லியன் ரூபாயும் இணைக்கப்பட்ட வாழ்வாதார செயற்றிட்டங்களை விருத்தி செய்வதற்கு 2 மில்லியன் ரூபாயும் தேவைப்படுகின்றதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago