Gavitha / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
சில்லாலை பண்டத்தரிப்பு பகுதியில் வீதியில் சென்ற பெண்ணின் 1 பவுண் தங்கச் சங்கிலியினை அறுத்தெடுத்துச் சென்ற சந்தேகநபரைத் தேடி வருவதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வா தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை (10), சில்லாலை பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துச் சென்ற சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை, பொலிஸார் சனிக்கிழமை (12) மீட்டுள்ளனர்.
கட்டுவன் மேற்கை சேர்ந்த ரூபன் (வயது 21) என்ற நபரே மல்லாகம் பகுதியில் உள்ள நண்பன் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளைப் பெற்று வழிப்பறியில் ஈடுபட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்தநபர் மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலியினை அறுத்தெடுத்து செல்லும் போது, சங்கிலியினை பறிகொடுத்தவர் மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை அடையாளம்; கண்டு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதில் மேற்படி நபர், மல்லாகம் பகுதியில் உள்ள தனது நண்பரிடம் பெற்ற மோட்டார் சைக்கிளில் இவ் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகப் பொறுப்பதிகாரி கூறினார்.
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago