Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாண நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற பெண்ணின், 72 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தைத் திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரை, சனிக்கிழமை (02) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வர்த்தக நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவின் உதவியுடனேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள மேற்படி பெண், பொருட்கொள்வனவு நிமித்தம், குறித்த வர்த்தக நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த இன்னொரு பெண்ணுடன் மோதியதில், அவருடைய கைப்பை கீழே விழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது பணம் காணாமல் போய்விட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago