2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பெண்மீது கத்திக்குத்து: சந்தேக நபர் கைது

Niroshini   / 2017 ஜனவரி 30 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிபகுதியில் பெண் மீது, முகத்திலும் மார்பிலும் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில், பொம்மை வெளிபகுதியினை சேர்ந்த 42 வயதுடைய நபரை ஞாயிற்றுக்கிழமை, கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார்  தெரிவித்தனர்.

சோமசுந்தரம் வீதி ஆணைக்கோட்டை பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38) என்றப் பெண், கத்திக்குத்துக்கு சனிக்கிழமை இலக்கானார்.

காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த  பெண்ணை, வீதியில் சென்ற மீனவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இக் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X