2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதிதாக கடமையேற்ற நீதவான்கள்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

நீதிச் சேவை ஆணைக்குழுவால் சிறுபான்மையின நீதவான்கள் 18 பேர் உள்ளிட்ட 117 நீதவான்களுக்கு கடந்த 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்துக்கு இணங்க வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் புதிதாக நியமனம் பெற்ற நீதிபதி, நீதவான்களின் விபரங்கள் வருமாறு,

பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக பெ.சிவகுமார், மட்டக்களப்பு நீதிமன்ற நீதவானாக மா.கணேசராசா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக ஜெ.பிரபாகரன், பொத்துவில் மாவட்ட நீதிபதியாக எம்.ஐ.வகாப்தீன், வவுனியா மாவட்ட மேலதிக நீதவானாக செ.லெனின்குமார், ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியாக ஏ.எம்.எம்.றியால், மல்லாகம் மாவட்ட நீதிபதியாக ஏ.யூட்சன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவானாக எஸ்.சதீஸ்தரன், வவுனியா மாவட்ட நீதிபதியாக ரீ.எல்.எவ்.மனாவ், திருகோணமலை மாவட்ட நீதிபதியாக என்.எம்.எம்.அப்துல்லா, கல்முனை மாவட்ட நீதிபதியாக வீ.இராமக்கமலன், மட்டக்களப்பு மேலதிக நீதவானாக எம்.ஐ.எம்.றிஸ்வி, மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவானாக ரீ.கருணாகரன், யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவானாக திருமதி கறுப்பையா ஜீவராணி, கல்முனை நீதிமன்ற நீதவானாக ஐ.பி.ரசாக், வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாக ஏ.சி.றிஸ்வான், சம்மாந்துறை நீதிமன்ற நீதவனாக எச்.எம்.எம்.பஸீல், யாழ்.மாவட்ட நீதிபதியாக ஜே.கஜநிதிபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், மற்றும் மன்னார் நீதிமன்ற நீதவான் ஏ.அலக்ஸ்ராஜா ஆகியோர் தொடர்ந்து அதே இடங்களில் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X