Sudharshini / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.தபேந்திரன்
வட மாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (27) கைதடியிலுள்ள திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக, தலைவர் - தங்கவடிவேல் கிருபாகரன், செயலாளர் - வேதநாயகம் தபேந்திரன், பொருளாளர் - விநாயகமூர்த்தி சண்முகநாதன், உப தலைவர் - திருமதி.யூலியா ஜேசுதாஸ் மரியப்பிள்ளை, உபசெயலாளர் - நாகராசா ராஜமனோகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் நடவடிக்கைகளை மாவட்டங்கள் ரீதியாக ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட இணைப்பாளர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் யாழ். மாவட்டம் - வே.சிவராஜா, கிளிநொச்சி மாவட்டம் - சு.ஜெயானந்தராஜா, முல்லைத்தீவு மாவட்டம் - கே.குணசிங்கம், வவுனியா மாவட்டம் - திருமதி.வி.பிரேமநிதி, மன்னார் மாவட்டம் - எஸ்.ரி.சந்திரபோஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
வட மாகாண சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் சங்கமாக இருந்த தொழிற்சங்கம் தற்போது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களை மட்டும் கொண்ட தொழிற்சங்கமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026