2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புனரமைப்பு பணிகள் ஸ்தம்பிதம்: விபத்துகள் அதிகரிப்பு

George   / 2016 ஜூலை 06 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஆடியபாதம் வீதி, கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையோர கட்டு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக கரையோரக் கட்டுக்கள் உடைக்கப்பட்டமையால் வீதியின் அரைப்பகுதி மட்டும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதுடன் தொடர்ந்து, புனரமைப்புக்கு தேவையான கற்கள் மறுகரையில் போடப்பட்டமையால் வீதி மேலும் குறுகியது.

இது இவ்வாறு இருக்க, கற்கள் பெட்டி வடிவில் ஒழுங்காக குவிக்கப்படாமையால், அவை பயன்படுத்தப்படும் வீதியில் பரவி விபத்துக்களை ஏற்படுத்துகின்றது. 

கடந்த வாரத்தில் மாத்திரம் இந்தப் பகுதியில் 4 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் இடறி வீழ்கின்றனர்.

புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நீண்ட நாட்களாக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. விரைந்து இந்தப் பணியை முடிப்பதன் மூலம், முக்கிய வீதியான இந்த வீதியால் மக்கள் இலகுவாக பயணம் செய்ய முடியும். இல்லாது விடின் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X