2025 ஜூலை 23, புதன்கிழமை

பிரதேச வைத்தியசாலைகளை பொதுமக்கள் நாடவேண்டும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

'எந்த நோய் வந்தாலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் பழக்கம் மக்களிடம் காணப்படுகின்றது. அதனை விடுத்து தங்களின் பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சைகளை பெறவேண்டும். இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை ஓரளவுக்கு குறைக்க முடியும்' என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,

'மக்கள் தங்கள் பிரதேசங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்ல அந்த வைத்தியசாலைகளில் வசதிகள், நவீன வசதிகளை ஏற்படுத்துவதை வடமாகாண சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

'நாயன்மார் கட்டில் முன்னர் முறிவு நோவு வைத்தியசாலையொன்று இருந்தது. அதற்கான காணி தற்போதும் உள்ளது. அங்கு சிறப்பு வைத்தியசாலை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

'வடமாகாணத்தில் அதிகளவான மாற்றுவலுவுள்ளோர் உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் வழங்குவதில் வடமாகாண அமைச்சுக்கள் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு ஒரு கொள்கை வகுக்கப்படவேண்டும். திறமையான மாற்றுவலுவுள்ளோர் பலர் எமது பிரதேசங்களில் காணப்படுகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .