2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

போராட்டக்காரர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்தனர்

Gavitha   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்னால், 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X