2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாலங்களை புனரமைத்து பாவனைக்கு தருமாறு கோரிக்கை

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள நெத்தலியாற்றுப்பாலம் மற்றும் வெளிக்கண்டல் பாலம் ஆகியவற்றை விரைவாக புனரமைத்து பயனாளிகளின் பாவனைக்கு திறந்து விடுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்;தீவு ஏ-35 வீதியின் பரந்தன் சந்தியிலிருந்து 11ஆவது கிலோ மீற்றர்; தூரத்தில் அமைந்துள்ள மூன்றாவது பாலமான வெலிக்கண்டல் பாலம் மற்றும் 15ஆவது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள நெத்தலியாற்றுப்பாலம் என்பவற்றின் புனரமைப்பு பணிகள், கடந்த 2014ஆம்; ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பணிகள் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு பெற வேண்டிய போதும் அதன் பணிகள் இதுவரை காலமும் முழுமை பெறாமல் இன்று வரைக்கும் பாலத்துக்கு பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதையூடாகவே வாகனங்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமங்களின் மத்தியில் பயணித்து வருகின்றனர்.

ஐக்கிய இராஜ்ஜிய நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பிராந்திய பால வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகள் இரண்டு வருடங்களை எட்;டிய போதும் இன்று வரை முழுமைப்படுத்தபடாது காணப்;படுகின்றது.

எனவே இதன் பணிகளை விரைவாக நிறைவு செய்து போக்;;குவரத்துக்கு திறந்து விடுமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளமையாலும், இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிக்காக மேலதிக நீர் வெளியேற்றப்படும் சந்தர்ப்பங்களிலும் போக்;குவரத்துக்கள் மேலும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .