Shanmugan Murugavel / 2022 மார்ச் 22 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிஸாருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போது பஸ்ஸின் வாசல் படியிலிருந்து பொலிஸாரால் கீழே இழுத்தெறியப்பட்ட ஈஸ்வரி பலமாக கீழே விழுந்து நிலத்தில் அடிபட்ட நிலையில் அங்கிருந்த பொலிஸார் சப்பாத்து கால்களால் வயிற்றுப்பகுதியில் மிதித்துள்ளதோடு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி போராட்டம் நிறைவுற்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற நிலையில் வாந்தி எடுத்தபின்னர் மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் .
4 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
13 Nov 2025