2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மக்களுக்குப் பதிலளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

மக்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் இன்றைய கலந்துரையாடலுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் வருகை தரவில்லை.

தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பட்டில் சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று(11) நடைபெற்றது.

வட மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் குறித்த கூட்டத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X