2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’மக்களுக்கு உதவும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’

க. அகரன்   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரிடர்க் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சமூகக்கடமை, அனைவருக்கும் உள்ளதென்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், இதனை அரசியல்வாதிகள் மட்டுமே செய்ய வேண்டியதில்லை என்றும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வாரு பிரஜைக்கும் இந்த கடமையுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரணா வைரஸ் தாக்கத்தினால் உலகமே தனது சுழற்சியை இழந்ததுபோல நிற்கிறது. உலக வல்லரசுகளையே ஆட்டம்காண வைத்துள்ள இந்த நோயின் தாக்கத்தினால் எமது நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் எமது நாட்டின் உன்னதமான சுகாதார சேவையுடன் இணைந்து ஏனைய அத்தியாவசிய சேவைகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதால் பாதிப்புக்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது ஓரளவு ஆறுதல் தருகின்றது.

கொறோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நோய்நிலை (கொவிட்-19) காரணமாக எல்லோரும் பலவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அன்றாட உழைப்பில் குடும்பத்தை வழிநடத்திய பல குடும்பங்கள்இ மாற்றுத்திறனாளிகள்இ பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்இ ஆதரவற்ற முதியோர்கள், தொற்றா மற்றும் தொற்று நோய்களிற்காக நீண்டகால சிகிச்சை பெறுபவர்கள் என பலர் அன்றாட உணவு மற்றும் மருத்துவ தேவைகளிற்காக பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளை இனம்கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் அப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சமூகக்கடமை உள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

 அந்தவகையில் சமூகப்பங்காளி என்றவகையில் நான்  முடிந்தவரை என்னாலான  பங்களிப்பை விசேட  வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுத்துள்ளேன். குறிப்பாக இந்நோய்நிலையால் பாதிப்புற்று உணவுத்தேவை உடையவர்களிற்கு சமைக்காத உணவுப்பண்டங்களை (உலர்உணவு) விநியோகம் செய்யும் செயற்பாட்டில் கடந்த இருவாரங்களிற்கு மேலாக ஈடுபட்டுள்ளேன். வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவழிப்பதற்காக மற்றவர்களை வீணாக விமர்சிப்பவர்கள் ஒருபுறம் தங்களது கடமையை சிறப்புடன் செய்துகொண்டு இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாது நாம் எமது பணியை சிறப்புற செய்வோம் என உறுதிகூறுகின்றோம். இதுவரை வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1815 குடும்பங்களுக்கும்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 741 குடும்பங்களுக்கும், வவுனியா வடக்கில் 179 குடும்பங்களுமாக மொத்தமாக 2735  குடும்பங்களுக்கு எனது உதவித்திட்டங்கள் சென்றடைந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இம் மனிதநேயப்பணிக்கு என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பிற்கு மேலாக பலர் உதவியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதோடு உரிய பயனாளிகளை இனம்கண்டுகொள்வதற்கு உதவிய பிரதேச செயலாளர்கள்இ கிராமசேவை உத்தியோகத்தர்கள்இ சமூகமட்ட அமைப்புகள்இ தனிநபர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளது என்பதை அறிந்தும் என்னுடன் களப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்இ இளைஞர் அணித்தலைவர்இ உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்இ தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இதேபோன்று எமது மாவட்டத்தில் இவ்வாறான சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

அதேவேளை நாம் உதவிக்கரம் நீட்டும்போது தவறவிடப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதோடு உங்களிற்கான எனது பணி தொடரும் என தெரிவித்துக்கொள்கிறேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X