Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தியாகராஜா நேற்று இவ்வாறு தெரிவித்தார்.
தியாகராஜா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “வட மாகாணத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் என்னிடம் வருகின்றன.
பிரதேச மட்டங்களில் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் ஆளுநர் அலுவலகம் வரை வருவது கவலைக்குரிய விடயம்.
இவ்வாண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்தில் ஆகக் குறைந்தது 5 நாட்கள் என்ற அடிப்படையில் ஆண்டில் மூன்று தடவைகள் மக்களின் பிரச்சினைகளை நேரில் ஆராய உள்ளேன்.
மாவட்டங்களிலிருந்து தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் என்னிடத்தில் வருகின்ற நிலையில் வருபவர்களை திருப்பி அனுப்ப முடியாது.
அவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன். இதற்குப் பிறகு நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். அதாவது அரச உத்தியோகத்தர்கள் இனிமேல் அலுவலங்களில் மட்டும் கடமை புரியாது மக்களிடம் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தொடர்பில் ஆராய்ந்து எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் .
மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்தில் நேரில் சென்று அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
01 May 2025