Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் - வரணி பகுதியில், நேற்று (14) இரவு, சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்களுக்கு பாதை விட மறுத்தவர் மீது, மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
வரணியைச் சேர்ந்த கே.கலாசுதன் (வயது 46) என்பவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான நபர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகலம் குறைந்த பாதை ஒன்றின் ஊடாக திருட்டு மணல் ஏற்றியவாறு ஐந்து உழவு இயந்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துப் பயணித்துள்ளன. அதன்போது அப்பாதையால் வீடு நோக்கிப் பயணித்தவர் அதனை அவதானித்து, அவர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்டு, வழி மறித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் மண்வெட்டியின் பிடியால் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந் பொலிஸார், அங்கிருந்து உழவு இயந்திரமொன்றை மீட்டனர்.
23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago