2025 ஜூலை 05, சனிக்கிழமை

மணல் கடத்தியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
நாகர் கோயில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய கன்ரர் வாகன சாரதிக்கு 50,000ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா, நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.

பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்த துன்னாலை பகுதியினைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதவான் அபராதம் விதித்துடன், மணலை பறிமுதல் செய்யுமாறு பொலிஸாருக்குப் பணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .