2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மண்டைதீவில் காணி அளவீடு

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பதுக்காக காணி அளவீடு செய்யும் பணிகள் நாளை வியாழக்கிழமை (11) மேற்கொள்ளப்படும் என நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இந்த காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன் போது ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எமக்கு தெரியாமல் ஒரு காணியையும் கையகப்படுத்த முடியாது. ஒரு துண்டு காணியை கூட பாதுகாப்பு தரப்பினருக்கு விட்டுக்கொடுக்க முடியாது. அது தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .