2025 ஜூலை 19, சனிக்கிழமை

மது அருந்தியவர் உயிரிழப்பு

Gavitha   / 2016 ஜனவரி 06 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மது அருந்த வேண்டாம் என்று வைத்தியர்கள் தெரிவித்திருந்த நிலையில், அதிக மது அருந்திவிட்டு மயக்கமுற்றிருந்த முதியவரொருவர், யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளார்.

புதுவருட தினத்தை கொண்டாடுவதாகத் தெரிவித்து, அதிக மது அருந்தியதாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகேந்திரம் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவார்.

திருமணம் ஆகாத இவர் உறவினர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X