Freelancer / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது.
பருத்தித்துறை - புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர்.
அப்போது, இரண்டாவது பட்டத்தின் 'முச்சை' கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.
சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.

17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025