Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது, 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (30) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
“இவர்களின் மூவர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
“இவர்கள், கடந்த 19ஆம் திகதி சிலாபத்தில் இருந்து வருகை தந்து வரையாறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும், சமூகத்துக்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு, கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
“இவர்களுடன் தொடர்பாக இருந்த, அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்களாக 18 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
“நான்காவது தொற்று உடையவர், இரணை இலுப்பைக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், கடந்த 21ஆம் திகதி, கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு பஸ்ஸில் வந்து, வவுனியாவில் இருந்து ஓட்டோவில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
“இவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கடந்த 26 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவருடன் தொடர்பில் இருந்த 5 பேர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
“மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1,286 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“இதுவரையான காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 3,423 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“இவர்களின் இருவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஏனைய 13 பேரும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
“தற்போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 4 பேரும் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago