Editorial / 2024 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த கபிரியேற்பிள்ளை கியாமர் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வீதியில் திடீரென மயங்கி சரிந்துள்ளார்.
வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
16 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago