Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம், கோப்பாய் நீர்வேலி வடக்கில் உள்ள சீயாக்காடு இந்து மயானத்தை புனரமைப்பு செய்து தருமாறு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை காலம் என்பதால், சீயக்காடு இந்து மயாணத்தின் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதால், உடலை தகனம் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கூரைகள் சேதமடைந்து இருப்பது தெரிந்தும் பிரதேச சபை கண்டுகொள்ளாமல் இருப்பதாக, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மழையில் உடலை தகனம் செய்யும் போது, நனைந்து மறுநாள் வரை மயானத்தில் இருந்து உடலை தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பிரதேச சபையிடம் முறையிட்டும் இதுவரை பலன் கிடைக்கவில்லை என்று, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
10 minute ago
28 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
46 minute ago
2 hours ago