2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’மயிலிட்டி முழுமையாக விடுவிக்கப்படவில்லை’

Editorial   / 2017 ஜூலை 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

'மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் காணிகளும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை' எனஇ மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் எஸ்.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

'இலங்கையில் உள்ள ஒரே ஒரு காச நோய் வைத்தியசாலையும் இப்பகுதியில் அமைந்துள்ளது. அதனையும் இராணுவத்தினர் விடுவிக்கவில்லை' என்றும் அவர் கூறினார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'27 ஆண்டுகளாக, இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள வலி.வடக்கு பகுதிகளில் இருந்து, ஜே - 251 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாக கடந்த 3ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.  இதற்கமைவாக, ஒரு தொகுதி காணியும் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள், மக்கள் குடியிருப்புக் காணிகள் அல்ல. தரிசு நிலக் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இரு ஆலயங்கள் சேதங்களுக்கு மத்தில் எமக்கு மீளவும் கிடைத்துள்ளன.

மேலும் இலங்கைக்கு வந்த இங்கிலாந்தின் 7 ஆவது மன்னரால் கட்டிக் கொடுக்கப்பட்ட இலங்கையில் ஒரே ஒரு காச நோய் வைத்தியசாலைக்குரிய காணியும் விடுவிப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அதனை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை.  எனினும், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டமையானது, பல மீனவ குடும்பங்களில் வாழ்வாதாரத்துக்கு உதவியுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X