2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மரண சடங்கு வீட்டில் கொள்ளை

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் - மோட்டார் சைக்கிள் விபத்தில், அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான நாகராசா நிதர்சன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார். 

இவரது இறுதி கிரியைகள், அளவெட்டியில் உள்ள நடைபெற்றன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த நான்கு பேர் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு கைக் கோடரி, வாள் என்பவற்றுடன் வீட்டுக்ள் புகுந்து வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் இருந்த சங்கிலி, பெண்களின் தோடுகள் என்பவற்றை அபகரித்ததுடன், ஒருவரை வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X