2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘மருதனார்மடம் சந்தை, அண்டிய வர்த்தக நிலையங்கள் மூடல்’

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என். ராஜ்

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

அதனால் நாளை காலை தொடக்கம் மறு அறிவித்தல்வரை மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன.

வர்த்தகர்கள் உதவியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்படும் இடங்கள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X