Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.அரசரட்ணம்
புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் பல இடங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை தருவார்கள். அத்துடன், ஆலய வளாகத்தில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்காக திருவிழாக்காலங்களில் தற்காலிக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நிரந்தர மலசலகூடம் அமைப்பதற்கு தீர்மானித்த ஆலய தர்மகத்தா சபையினர் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இருந்து நிதியைப் பெற்றனர்.
அந்நிதியைக் கொண்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாகவுள்ள குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக்குமான நவீன முறையில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago