2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மருந்தகத்தில் கொள்ளை;சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறையிலுள்ள மருந்தகம் ஒன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உருத்திரேஸ்வரன் விஜயராணி ஞாயிற்றுக்கிழமை (03) உத்தரவிட்டார்.

இதன்போது, பால்மா, பிஸ்கட் ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருந்தன. திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரது முகம் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.ரீ.வியின் கமராவில் பதிவாகியது.

அதனை வைத்து, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தலைமையிலான குழுவினர் சந்தேகநபர்கள் இருவரையும் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X