2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மறுப்பு தெரிவித்த அத்தியட்சகருக்கு இடமாற்றம்

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனோ வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மீதான விசாரணைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த வைத்தியர் குகதாசன் வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என, அங்கு கடமையாற்றும் வைத்தியர்களால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்மைய, குறித்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த வைத்திய அத்தியட்சகர் சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அத்துடன், அங்கு கடமையாற்றி வைத்தியர் கமலநாதன், தற்காலிக அத்தியட்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X