Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் கலைப் பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள்நுழைவுத் தடை, மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாக, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் மாணவர் நலன் கருதியும், துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, துணைவேந்தரின் முடிவை மாணவர்களுக்கு அறிவித்ததோடு, உணவு ஒறுப்பைக் கைவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் பின் நின்றனர்.
எனினும், துணைவேந்தரின் இந்த நடைமுறை, முரண்பாடுகளுக்குத் தீர்வாக அமையும் என்றும் தொடர்ந்தும் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளாமல், இந்த நடைமுறைகளைப் பின்பற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .