Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 20 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சாவகச்சேரி கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொடிகாமம் - கச்சாய் பகுதியில், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியே, இவ்வாறு அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பாடசாலையில் தரம் 10, 11 மாணவர்களின் பெற்றோருக்கான கூட்டம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை, மைதானத்தில் வைத்து பாடசாலை அதிபர் தண்டித்துள்ளார். இதன்போதே ஓட்டோவின் ஏரியல் ஒன்றால் அதிபர் அடித்துள்ளதாக, குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .